
இந்த வருடம் ரக்ஷா பந்தன் பண்டிகையானது ஆகஸ்ட் 30 மற்றும் 31ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு 3000 ரூபாய் வழங்குவதாக சமூக வலைதளங்களில் போலியான தகவல் வைரலாகி வருகிறது. இந்த தகவல் பரவியதை அடுத்து இந்த பணத்தை பெறுவது எப்படி என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எனவே இது போன்ற பதிவு ஏதேனும் வந்திருந்தால் நீங்களும் கவனமாக இருங்கள் இந்த செய்தியின் உண்மை தன்மையை அறிவதற்கு அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு இணையதளமானPIB இந்த விஷயத்தை ஆராய்ந்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உண்மையில் நாடு முழுவதும் உள்ள சகோதரிகளுக்கும் மத்திய அரசானது ராக்கி பண்டிகை என்று 3000 ரூபாய் பணம் பரிசாக வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டு வருகிறது பெண்களுக்கான பிரத்யகல் லாட்லி திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும் அதில் மாதந்தோறும் 3000 வரை பணம் அரசு செலுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது . அதாவது பெண்களுக்கு 3000 ரூபாய் கொடுப்பதாக இந்த செய்தி போலியானது இது போன்ற எந்த திட்டத்தையும் அரசு அறிவிக்கவில்லை. எனவே இது போன்ற தவறான பதிவுகளை நம்ப வேண்டாம் என்று கேட்கப்பட்டுள்ளது.