ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். நம்முடைய ஆதார் கார்டை அடையாள சான்றாக ஒருவருடம் கொடுத்தால் அதன் நம்பகத்தன்மை குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் அடிக்கடி கேள்வி கேட்பதை காணலாம். யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எந்த ஆதார் கார்டையும் சரிபார்க்க முடியும். அதற்கான வசதியை UIDAI வழங்கி இருக்கிறது. ஆதார் அட்டையின் உண்மை தன்மையை ஆன்லைனிலும் சரி பார்க்கலாம்.

ஆன்லைனில் நம்பகத்தன்மை சரிபார்ப்பதற்கு ஆதார் வைத்திருப்பவருடைய வயது, பாலினம், மாநிலம் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணின் கடைசி மூன்று இலக்கங்களை சரி பார்க்க வேண்டும் . இதற்கு https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar என்ற இணையதளத்தில் சென்று ஒரு நபர் தன்னுடைய ஆதர் எண்ணை உள்ளிட வேண்டும். ஒவ்வொரு ஆதாரிலும் பாதுகாப்பான QR குறியீடு இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த க்யூ ஆர் குறியீட்டில் ஆதார் எண் வைத்திருப்பவருடைய பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் இருக்கும். கியூ ஆர் கோட்டில் உள்ள தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் இது ஆதார் அமைப்பால் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டுள்ளதால் ஆதார் அட்டையுடன் மற்றும் நபரின் படம் இருந்தாலும் அதை கண்டுபிடித்து விடலாம் . கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் ஆதார் qr ஸ்கேன் செயலி பயன்படுத்தி க்யூ ஆர் குறியீட்டை சரி பார்க்கலாம்