கர்நாடகா மாநிலத்திலுள்ள தாவணகெரே என்னும் கிராமத்தில் வசித்து வரும் அதீபுல்லா என்பவர் மளிகை கடை நடத்தி வருகின்றார். இவரது வீட்டின் அருகே வசிக்கும் சதாம் என்பவர் சாலை ஓர ஹோட்டல் நடத்தி வருகின்றார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதாமின் குழந்தைகள் அதீபுல்லாவின் கடைக்கு சென்று ரூ. 20 ரூபாய் கொடுத்து பாக்கெட் வாங்கியுள்ளனர். ஆனால் அவை காலாவதியாகி இருந்ததால் சதாம் வேறு பாக்கெட் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அதீபுல்லா மறுப்பு தெரிவித்ததால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இந்நிலையில் கிராமத்தினர் சமாதானம் செய்த நிலையில் அதில் உள்ள மீது சென்னகிரி காவல் நிலையத்தில் சதாம் புகார் அளித்துள்ளார்.

இதனால் அதீபுல்லா கோபமடைந்து அது 30-க்கும் மேற்பட்டோருடன் சதாமின் ஹோட்டலுக்கு சென்று அவரை தாக்கியது மட்டுமல்லாமல் ஹோட்டலையும் அடித்து நொறுக்கி உள்ளனர். அது மட்டுமல்லாது சண்டையை தடுக்க வந்தவர்களையும் தாக்கியதால் கலவரமாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசூல் நிலையை சரி செய்துள்ளனர். இந்நிலையில் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.