
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி பகுதியில் சஞ்சனா என்ற மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 461 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மாணவியின் தந்தை சமூக அறிவியல் தேர்வின்போது உடல்நலக் குறைவினால் காலமானார்.
இருப்பினும் தன் தந்தையின் துயரை பொறுத்துக் கொண்டு மாணவி தேர்வு எழுத சென்றார். தன்னுடைய தந்தையின் ஆசி என்றென்றும் தன்னுடன் இருக்கும் என்று கூறிவிட்டு மிகுந்த மன வேதனையுடன் சிறுமி தேர்வு எழுதிய நிலையில் தற்போது 416 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மேலும் தந்தையை இழந்த சோகத்திலும் மாணவி தேர்வு எழுதிய நிலையில் நல்ல மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.