கேரளாவின் நாதாபுரத்தில் உள்ள கடமேரி ஆர்.ஏ.சி. மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்புக்கான மேம்பாட்டுத் தேர்வு நடைபெற்று வந்தது. இந்த தேர்வின் போது ஒரு மாணவரின் நடத்தை கண்காணிப்பாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது விவரங்களை சரிபார்த்தபோது மேலும் சந்தேகம் ஏற்பட, பள்ளி அதிகாரிகள் உடனடியாக அழைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய விசாரணையில் தேர்வில் ஆளுமாராட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது இஸ்மாயில் என்ற கல்லூரி மாணவர், தோல்வி பயத்தில் இருந்த தனது நண்பருக்காக தேர்வு எழுத வந்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி இஸ்மாயிலை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.