உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டா செக்டார் 94 பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட விபத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கட்டுமான பணிகள் நடைபெறும் வளாகத்தை ஒட்டிய நடைபாதையில், சிவப்பு நிற லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, இரண்டு தொழிலாளர்கள் மீது மோதியது. பின்னர் அந்த கார் அருகிலிருந்த மரத்தில் மோதி நின்றது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.
Speeding Lamborghini runs over 3 people in Noida Sector 26, grievously injuring them. Listen to the guy’s tone after he’s caught. He’s been arrested. pic.twitter.com/Upz44LhyQ1
— Shiv Aroor (@ShivAroor) March 30, 2025
விபத்துக்குப் பிறகு, தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஓடிச் சென்ற போது, காரை ஓட்டிய நபர் “இங்கு யாராவது இறந்தார்களா?” என அலட்சியமாகக் கேள்வி எழுப்பிய காணொளியும் வைரலாகியுள்ளது. இதில், தொழிலாளர்கள் அதிருப்தியுடன் பதிலளித்ததையும் காணலாம். விபத்தில் படுகாயமடைந்த இரண்டு தொழிலாளர்கள் மருத்துவமனைக்குக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த லாம்போர்கினி கார் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
