அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ரவியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.