பணி நேரம் முடிந்ததும் தானாகவே சிஸ்டம் ஷட் டவுன் ஆகும் நடைமுறை மத்திய பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது .

பணி நேரம் முடிந்ததும் கணினி தானாகவே ஷட் டவுன் செய்து கொள்ளும் இந்த நடைமுறையை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பணியாளர்களின் வேலை நேரம் சீராக இருக்கும் என்றும் ஊழியர்கள் எவ்வித மன அழுத்தமும் இன்றி பணியாற்றுவார்கள் என்றும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அந்த நிறுவனத்தில் HR ஒருவர் தனது பதிவில் பணி சுமை உள்ள நிறுவனத்தில் நீங்கள் பணிபுரிந்தால் உங்களுக்கு மண்டே மோட்டிவேஷன், ஃப்ரைடே ஃபன் போன்றவற்றிற்கு பணம் தேவை இல்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த நடைமுறையில் நிம்மதியாக மற்றும் நெகிழ்வுத் தன்மையுடன் பணி புரிவதற்கான சூழலை எங்களது நிறுவனத்தில் ஏற்படுத்தியுள்ளோம் என கூறியுள்ளார். வந்து நீங்களும் எங்களோடு இணைந்து கொள்ளுங்கள் என அவர் அந்த முழு பதிவில் கூறியுள்ளார்.

அதற்கு கீழ் அவரும் அவரது கம்ப்யூட்டரும் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த கம்ப்யூட்டரில் எச்சரிக்கை எழுத்துக்கள் போட்டு அதன் கீழ் உங்களது அலுவலக பணி நேரம் முடிந்து விட்டது என்றும் இன்னும் பத்து நிமிடத்தில் இந்த கம்ப்யூட்டர் ஆப் ஆகிவிடும் என்றும் வீட்டிற்கு கிளம்புங்கள் என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. அதற்கு கீழ் கமெண்ட் செய்துள்ள பலரும் எங்களுக்கும் இந்த வேலை வேண்டும் என்றும் இது ஒரு நல்ல செயல் என்றும் கூறியுள்ளனர்.

அதே சமயம், இல்லை இது ஊழியர்களின் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்குமே தவிர குறைக்காது என்றும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றார்கள். அந்த கம்ப்யூட்டர் ஆப் ஆவதற்குள் இலக்கை முடித்தே ஆக வேண்டும் என்ற பதற்றம் இருக்கும். அதற்காகவே திட்டமிட்டு இதுபோன்ற செட்டிங்கை நிறுவியுள்ளது என்றும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.