
குஜராத்தின் சூரத் பகுதியில் சந்திரகாந்த் ராஜா என்பவர் மொபைல் கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது தயாரிப்பை விளம்பரப்படுத்தவும், சமூக ஊடகங்களில் பிரபலமாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தயாரித்த மொபைல் போனை ஒரு கம்பளத்தின் மீது வைத்து 4 முதல் 5 டன் எடையுள்ள யானையை அதன் மீது நடக்க வைத்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் வனத்துறை அதிகாரிகள் கண்களில் பட்டது. இதனால் அவர்கள் சந்திர காந்த் ராஜாவிற்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பி வைத்து நேரில் வருமாறு உத்தரவிட்டனர். ஆனால் அவர் ஆஜர் ஆகாத நிலையில் வனத்துறை அதிகாரி நிதின் வன்மோரா ” விலங்குகளை பயன்படுத்தி விளம்பரம் செய்வது சட்டப்படி குற்றமாகும் என்று கண்டித்துள்ளார்.
பின்னர் வெளியான வீடியோவில் மொபைல் போன் சேதமடைந்திருப்பதாக காணப்பட்ட நிலையில் அதன் கண்ணாடி துண்டுகள் யானையின் கால்களில் பட்டு அதற்கு வேதனையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார். அதோடு விளம்பரத்திற்காக யானையை பயன்படுத்தி செய்த குற்றத்திற்காக அவரை நேரில் ஆஜராக சொல்லி இருந்தும், அவர் வராததால் அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.