இயற்கையாகவே விலங்குகளும் மனிதர்களைப் போன்ற பாசப்பினைப்புடன் வாழ்பவை. அதனை எடுத்துக்காட்டும் விதமாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று அனைவரையும் ஈர்த்து வருகிறது.

அதாவது அந்த வீடியோவில், ஒரு மிருக காட்சி சாலையில் கொரில்லா குரங்குகள் உள்ள பக்கத்தில் சிறு குழந்தை ஒன்று தாயிடமிருந்து தவறி உள்ளே விழுந்து உள்ளது.

இதனைக் கண்ட கொரில்லா குரங்கு அந்த குழந்தையின் அருகே வந்து அந்த குழந்தையை மெல்ல தூக்கி அவரது தாயிடம் கொடுத்தது. மிருகம் என்றாலும் அதுக்கும் தாய் பாசம் என்பது நன்றாக தெரியும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.