தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் போது அவர் பொதுமக்களுடன் உரையாடி அவர்களின் பிரச்சனைகளை கேட்டு வருகின்றார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் மகிழ்ச்சியுடன்
“என் மகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கனவை நிறைவேற்றிவிட்டார்” என கூறியுள்ளார். இதைக் கேட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடனே பெருமிதத்துடன் “பாருங்கள்! நாங்கள் கொண்டு வந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டு சட்டம் எவ்வாறு வேலை செய்துள்ளது பாருங்கள். ஒரு சாதாரண குடும்பத்தில் உள்ள மாணவியின் மருத்துவக் கனவு இன்று நினைவாகி உள்ளது” என உருக்கமாகப் பேசினார்.
மேலும், இது அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சாதனைகளில் ஒன்றாகும் என்றும், அந்தச் சட்டம் பல நூற்றுக்கணக்கான அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த தருணத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதுடன், அதிமுக ஆதரவாளர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது. கல்வி வாய்ப்புகளை சமுதாயத்தின் அனைத்து நிலைகளுக்கும் கொண்டு சென்றது எடப்பாடி அரசின் பெருமை என பலரும் பாராட்டி வருகின்றனர்.
எஞ்சாமி தந்தானே
எல்லாமே எஞ்சாமி தந்தானே..
மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu ! ♥️நீட்டைவென்ற_EPS7Point5#EPSfor2026 pic.twitter.com/hgqAgREOao
— Raj Satyen – SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) October 5, 2025
