நாட்டில் மாத சம்பளம் பெறும் தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு pf என்கிற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இது மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நிலையில் EPFO என்ற அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தங்களின் ஓய்வூதிய காலத்தில் பொருளாதார சிரமம் இல்லாமல் வாழ்வதற்கு இந்த திட்டம் மிகுந்த பயனுள்ள ஒரு திட்டமாகும்.

இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் கணக்கு வைத்திருப்போர் தங்களுடைய குறைகளை எப்படி காண்பது என்று தெரியாமல் இருப்பார்கள். அவர்களுக்காக தற்போது EPFO ஆணையம்  ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ‌ தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருப்பவர்களின் குறைகளை தீர்ப்பதற்காக குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த குறைதீர் முகாம் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் இந்த முகாம் தமிழ்நாட்டில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதேபோன்று புதுச்சேரியிலும் நடைபெற உள்ளது.