நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான தேதியை வரும் ஜூன் 26ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

நவம்பர் 4, 2022 அன்று உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வூதியம் பெறுவோர்/உறுப்பினர்களிடமிருந்து விருப்பம்/கூட்டு விருப்பத்தை சரிபார்ப்பதற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை EPFO செய்துள்ளது.  இந்த செயல்முறையை எளிதாக்க, ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கான ஆன்லைன் வசதி மே 3 வரை மட்டுமே இருக்கும்.