இபிஎஃப் (EPF) பயனாளிகள் கடந்த ஒரு வார காலமாகவே இ பாஸ்புக் (EPF Passbook) வசதியை பயன்படுத்த முடியவில்லை என புகார் கொடுத்து வருகிறார்கள். இதை சரி செய்வதற்கான முயற்சியில் இபிஎஃப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மொபைலில் இ பாஸ் புக் வசதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு முதலில் உங்கள் செல்போனில் உமாங் ஆப்பை (UMANG APP) டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் உங்கள் இபிஎப் தொகை மற்றும் வட்டி விவரம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

அதோடு பயனாளிகள் தங்கள் கோரிக்கைகளின் நிலவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். முதலில் செல்போனில் உமாங் ஆப்பை டவுன்லோடு செய்த பிறகு உங்களுடைய UAN நம்பருடன் இணைக்கப்பட்ட செல்போனுக்கு ஓடிடி நம்பர் வரும். அதை பதிவிட்டு உமாங் ஆப்பை ஓபன் செய்து அதில் இபிஎஃப்ஓ தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு employee centric service என்பதை தேர்வு செய்துவிட்டு view passbook ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களுடைய இ பாஸ் புக் தெரியும்.