திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தனியார் பள்ளியில் பேட்மிட்டன் வீராங்கனை பத்ம பூஷன் பி.வி சிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதையடுத்து மாணவர்கள் மத்தியில் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து பேசியதாவது “தினசரி காலை, மாலை 27 கி.மீ பயிற்சிக்காக நான் பயணித்து வீடு திரும்புவேன். நான் என்னுடைய மனதில் எண்ணி கொண்டதெல்லாம் தங்க பதக்கத்தை வெல்ல முடியும் என்ற மன உறுதிதான்.

3 மாதம் போன்களை பயன்படுத்தாமல் இருந்து வந்தேன். அதோடு 3 மாத காலம் எந்த ஒரு துரித உணவுகளையும் சாப்பிடாமல் இருந்தேன். இந்தியாவுக்காக மேடையில் நிற்கும்போது எப்போதும் மகிழ்ச்சியடைவேன். இதற்கிடையில் என்னை சில்வர் சிந்து என கேலி செய்தனர். அவர்கள் பேச்சை பொருட்படுத்தாமல் நான் தங்கப்பதக்கத்தை வெல்வது எப்படி? என்பதில் மற்றுமே கவனம் செலுத்தினேன்” என்று அவர் பேசினார்.