
சமூகஊடகங்களில் பிரபலமான வீஜே பார்வதிக்கு ரசிகர்கள் அதிகம். இவர் ரவுடி பேபியாக எந்தவொரு விஷயத்திலும் ஓப்பனாக பேசுவார். மேலும் அடிக்கடி எங்காவது டூர் சென்று அங்கு தனக்கு கிடைத்த அனுபவங்களை வீடியோ மற்றும் சோஷியல் மீடியா போஸ்ட்டாக பதிவிட்டு வருகிறார். அந்த அடிப்படையில் எக்ஸோடிக் பெட்ஸ் என அழைக்கப்படும் மிக அரிதான செல்லபிராணிகள் விற்கும் பண்ணைக்கு வீஜே பார்வதி சமீபத்தில் சென்றுள்ளார்.
அங்கு செல்லபிராணிகளாக வளர்க்கப்படும் அனகோண்டா பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டும் கையில் பிடித்தவாறும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் வீஜே பார்வதி. இவ்வாறு பாம்புகளுடனும் ஓணான்களுடனும் துணிச்சலாக பயமின்றி விளையாடும் இவரின் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.