உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டுவிட்டரை வாங்கினார். அதிலிருந்து டுவிட்டரில் பல அப்டேட்டுகளை அவர் அறிமுகப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் நிறுவனத்தின் CEO ஆக பதவியேற்ற முதல் நாளே முக்கியமான பதவிகளில் உள்ள நபர்களை வெளியேற்றினார். ப்ளூடிக் சேவைக்கு கட்டணம், ஊழியர்கள் பணிநீக்கம் என அதிரடி காட்டிவரும் எலான்மஸ்க் தற்போது புது டுவிட் செய்துள்ளார்.

அதாவது, டுவிட்டரில் விளம்பரங்கள் மிக பெரிய அளவிலும், அடிக்கடியும் வருகிறது. வருகிற வாரங்களில் இந்த 2 பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிவிட்டு உள்ளார். twitter சந்தா சேவையானது பயனர்களுக்கு விளம்பரமில்லாத டுவிட்களை காண்பிக்கும் என அறிவித்துள்ளார். அதோடு விளம்பரம் இல்லாமல் டுவிட்டர் தளத்தை அணுகும் அடிப்படையில் புது சந்தாதாரர் திட்டத்தை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இவ்வாறு எலான் மஸ்கின் புது அறிவிப்பு இணைய பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.