உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இந்தியா தான் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலம் தான் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் ஆகும். இந்த மாநிலத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் அரசு பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது அரசு துறையில் பணியாற்றும் பெண்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தால் மீண்டும் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்கிம் மாநிலத்தில் பிறப்பு விகிதம் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதால் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ளார்.