
நடிகர் சத்யராஜ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது “இலங்கையிலுள்ள வடக்கு மாகாண பகுதியில் அமைந்துள்ள நெடுந்தீவில் பசுமைப்பள்ளி, பசுமை சமுதாயம் எனும் பெயரில் ஈழத்து காந்தி என அழைக்கப்படும் தந்தை செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திரஹாசனும், என் மகள் திவ்யாவும் இணைந்து ஒரு அற்புதமான திட்டத்தை துவங்கியுள்ளனர்.
இதில் நான் மிகவும் பெருமை மற்றும் மகிழ்ச்சி அடைகிறேன். இத்திட்டத்தில் பயனுள்ள விஷயங்கள் அடங்கி இருக்கிறது. ஈழத் தமிழர்களின் நலனுக்காக எனது மகள் திவ்யா தொடர்ந்து உழைப்பார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.