தமிழ் திரையுலகில் முந்தானை முடிச்சு திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் நடிகராக மட்டுமின்றி சினிமா பத்திரிக்கையாளராகவும் இருக்கிறார். இதற்கிடையில் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல்களில் நடிகர், நடிகைகள் குறித்து பேசி வரும் கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அண்மையில் ஷகிலா தொகுத்து வழங்கிய ஒரு பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பதிலளித்தார்.
அப்போது, பழைய நடிகர், நடிகையரின் அந்தரங்க விஷயங்களை இப்போது பேசுவது அவர்களது குடும்ப வாழ்க்கையை பாதிக்காதா? என்று ஷகிலா கேள்வி எழுப்பினார். அதற்கு பயில்வான் கூறிய பதிலில் “பிரபலமாக இருந்தால் இதெல்லாம் இயல்பானது தான்” என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசுவது தொடர்பாக ஷகிலா கேள்வி எழுப்பினார். உங்களை எதற்காக மலையாள சினிமாவில் நடிக்கக்கூடாது என ஒதுக்கிவைத்தார்கள்? என பயில்வான் ஷகிலாவை பதில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு எவ்விதமான தடையும் தனக்கு விதிக்கப்படவில்லை என ஷகிலா கூறியுள்ளார்.