அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபரும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் தற்போது இந்தியாவில் விரைவில் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எலான் மஸ்க் தொடங்க உள்ள சேவை நிறுவனத்தின் பெயர் ஸ்டார்லிங்க் என கூறப்படுகிறது. எலான் மஸ்க் மிகவும் பிரபலமான ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராவார். இந்தியாவில் ஸ்டார் லிங்க் கொண்டுவர இந்திய தொலைத்தொடர்பு துறைக்கு ஏற்கனவே எலான் மஸ்க் விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில் ஸ்டார் லிங்க் விண்ணப்பம் குறித்து இந்திய தொலைத்தொடர்பு அமைப்பகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியர்களின் டேட்டா தகவல்கள் இந்தியாவுக்குள்ளேயே பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஸ்டார்லிங்க் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ஸ்டார்லிங்க்  விண்ணப்பம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என கூறப்படுகிறது. இதே சமயம் ஸ்டார் லிங் இந்த ஒப்பந்தத்திற்கு தகுந்த ஒப்புதல் விண்ணப்பத்தை இந்திய தகவல் தொடர்பு துறைக்கு இதுவரை எலான் மஸ்க் அனுப்பவில்லை. இந்த நிலையில் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து ஸ்டார்லிங்கின் விண்ணப்பம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது முக்கியமானதாகும். எலான் மஸ்க் டொனால்ட் ட்ரம்புக்கு தனது முழு ஆதரவையும் தேர்தலில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.