கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இபிஎஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபராக இருந்த கனகராஜ் என்பவரின் சகோதரர் தனபால் தன்னை பற்றி அவதூறாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வருவதாகவும்,  பேட்டியளித்து வருவதாகவும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

1 கோடி ரூபாய்மான நஷ்டம் கேட்டு தொடரப்பட்ட இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.  அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கக்கூடிய நிலையில்,தன்னை பற்றி அவதூறாக பரப்புவது மட்டுமல்லாமல், தம்முடைய பெயருக்கும் –  புகழுக்கும் களங்கம் விளைவிக்கக்கூடிய வகையில்….  எதிர்க்கட்சியின் தூண்டுதலின் பெயரால் தனபால் இதுபோன்று செயல்பட்டு வருகின்றார்.

எனவே தன்னைப் பற்றி பேசுவதற்கு தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை நீதிபதி மஞ்சுளா முன்பாக விசாரணைக்கு வர இருக்கின்றது. விசாரணைக்கு வரும்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் வாதங்களில் உண்மை இருக்கும் பட்சத்தில் தனபாலுக்கு தடை விதிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அல்லது தனபால் தரப்பிற்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு,  வழக்கின் விசாரணை உரிய காலத்திற்கு தள்ளி வைக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது