விக்கிரவாண்டி தொகுதி தொகுயில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் திமுக கட்சியில் வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கா.அபிநயா ஆகியோருக்கு இடையே பிரதான போட்டி நிலவிய நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் தற்போது 13-வது சுற்று முடிவடைந்த நிலையில் அன்னியூர் சிவா ‌83,431 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். மேலும் பாமக வேட்பாளர் சி. அன்புமணி 36,241 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா 6,432 வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.