கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின்,  சமீபத்தில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை தொறந்தாங்க. நீங்க எல்லாம் பார்த்து இருப்பீங்க. அதுக்கு யாரை அழைக்கணும் ?  ஜனாதிபதியை அழைத்து இருக்கணும். ஏன் அழைக்கவில்லை ?  ஏனென்றால், அவங்க அவங்க ஆளு கிடையாது. நம்ம தலைவர் அழைச்சாரு, இந்த கலைஞர் மருத்துவமனை தொறக்குறதுக்கு அழைச்சாரு, அதே மாதிரி சட்ட மன்றத்துல கலைஞர் உடைய திருஉருவ படத்தை திறப்பதற்கு திரு. ராமநாத் கோவிந்த் அவர்களை அழைத்தார்கள்.

ஆனால் யாரை தெரியுமா கூட்டிட்டி போனாங்க? இங்க இருக்க கூடிய மடாதிபதிகளை  எல்லாம் கூட்டிட்டு போனாங்க .கேட்டா சொல்லுறாரு,  தமிழ் மக்கள் எங்களை ஆதரிக்க வேண்டும். ஏன் ? நாங்க செங்கோல் வச்சிட்டோம், செங்கோல் வச்சிட்டா ஆதரித்து விடுவார்களா ?  இவர்கள் இன்னொரு முறை ஆட்சி செய்தால், தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும்,  யாராலும் காப்பாற்ற முடியாது.

எப்படி அதிமுக என்ற அந்த அடிமைகளை 2021 தேர்தலில் விரட்டி அடித்தீர்களோ….  தமிழ்நாட்டிற்கு ஒரு விடியலை தந்தீர்களோ.. அதே போல் இந்த பாசிஸ்டுகளை…  அடிமைகளுடைய எஜமானர்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு,  அவர்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்பி இந்தியாவுக்கு ஒரு விடியலை தேடித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.