பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், டெய்லர் ஸ்விஃப்ட் ஒரு குழந்தை இல்லாத பூனை காதலன் என்று கிண்டலாக கூறியிருந்தார். மேலும், “நான் உங்களுக்கு ஒரு குழந்தையை தருகிறேன், உங்கள் பூனையை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கிறேன்” என்று பதிலளித்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மஸ்க்கின் இந்த கருத்து பலரால் கண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இவ்வாறு கருத்து தெரிவிப்பது தவறு என்றும், இது பெண்ணடிமைத்தனத்தின் ஒரு வடிவம் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.