முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி அதிமுக மதுரை மாநாட்டில் பேசியபோது, ஸ்டாலின் அவர்களே புலியின் வாழை மிதிக்கலாம் என்று நினைக்காதீர்கள். சீறிவரும் சிங்கத்தின் ரோமத்தை இழுத்து விளையாடாதீர்கள். சிங்கத்தின் குகையில் சிங்கத்தை சந்திக்கும் சிங்கம் யார் ? எங்கள் அண்ணன் எடப்பாடியார். களையெடுக்கவும் அவருக்கு தெரியும்,  மடை கட்டவும் அவருக்கு தெரியும். சொல்லப்போனால் பாம்புக்கு பால் வைக்கவும் தெரியும்.

படம் எடுத்து ஆடும் போது மண்டையில் அடித்து பல்லை பிடுங்கவும் தெரியும். திராவிட மாடல் திருடர்கள் ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவும் தெரியும். நம்பிக்கையோடு இருங்கள் நாளை நமதே அண்ணன் எடப்பாடியார். நாளை தமிழகத்தை வழிநடத்துவார். இதுதான் புரட்சி, இதுதான் புதுமை.  அஇஅதிமுகவிற்கு மதுரை ஒரு திருப்புமுனை மாநாடு ஏனென்றால் ? இதற்கு முன்னர் செல்லூர் ராஜு அவர்கள் சொன்னார்கள்.

அம்மா அவர்கள் எதிர்கட்சியாக இருக்கும்போது கோயம்புத்தூரில் நாங்கள் ஒரு மாநாடு நடத்தினோம் என்று…  ஆர்ப்பாட்டம் நடத்தினோம். திருச்சி – மதுரை முடிச்சிட்டு நேராக அம்மா கோட்டைக்கு சென்றார்கள். அதுதான் இன்றைக்கு எழுச்சியான மாநாடு. இதை முடித்துவிட்டு எடப்பாடியார் கோட்டைக்கு போவார் என்று சொல்லி இந்த சிறப்பான வாய்ப்பை தந்த பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கும்,  இதற்காக பாடுபட்ட மதுரை மூன்று மாவட்ட செயலாளர் அவர்களுக்கும், அத்தனை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என எல்லோருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன் என தெரிவித்தார்.