தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பாதிப்புக்கு இதுவரை 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 38000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அமெரிக்கா , டென்மார்க் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் பிஏ &2.86 என்ற உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பரவி வருகின்றது.

இது இந்தியாவில் ஊடுருவாமல் தடுப்பதற்கான ஆலோசனையை மத்திய அரசை மேற்கொண்டு வருகின்றது. அதேசமயம் தமிழகத்தில் புதிய வகை கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. இது தொடர்பாக அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இதுவரை எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.