ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், தலைமை கழகத்தினர் பேசுகின்ற பொழுது எடுத்து வைக்கின்ற கருத்துக்களை நாம் எவ்வாறு செயல்படுத்த வேண்டும். அவர்கள் நடத்திய  மாநாடு எப்படிப்பட்ட மாநாடு ? எதற்காக மாநாடு நடத்தினார்கள் ?  அந்த மாநாட்டை நடத்துவதற்கு எவ்வளவு தொகை செலவு செய்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் எனக்கு முன்பு பேசிய அருமை தலைவர்கள் எடுத்து வைத்திருக்கின்றார்கள்.

நாம் நடத்திய ஆர்ப்பாட்டம்…  அம்மா அவர்கள் வாழ்ந்த கொட நாடு இல்லத்தில் நடந்த கொலை – கொள்ளையை விரைந்து விசாரித்து உரிய தண்டனையை பெற்று தர வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசை வலியுறுத்தி நடத்திய ஆர்ப்பாட்டம் தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும்  சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தமிழகத்தில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் என்று சொன்னால் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அறிவித்த அந்த ஆர்ப்பாட்டம் தான். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 3,000, 5,000,  7000, 10,000 குறைந்தபட்சம் 3 ஆயிரம் பேருக்கு குறையாமல் அனைத்து மாவட்டத்தில் நடந்திருக்கிறது. அம்மா வாழ்ந்த  இல்லத்தில் கொலை, கொள்ளை செய்த அந்த துரோகிகளை… துரோகி  கூட்டத்தை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். அந்த கூட்டம் யாருடைய துணையோடு நடைபெற்றது.

அங்கே நடந்த சம்பவத்தை எல்லாம் நாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுக்கு, தொண்டர்களுக்கு, பொதுமக்களுக்கு விரிவான முறையிலே  எடுத்து வைத்தோம். அதை  கேட்டு… அங்கே இருக்கின்ற பொதுமக்களும்,  தாய்மார்களும் அம்மா வீட்டிலேயே கொள்ளை அடித்தானா ? எடப்பாடி…  கொலை செய்தானா ? எடப்பாடி…  துரோகி அந்த அம்மா காலில் விழுந்து முதல்வர் பதவியை பெற்ற அந்த எடப்பாடி செய்திருப்பான் என்று மக்கள் சொல்லுகின்ற ஒரு நிலையை ஆர்ப்பாட்டத்தில் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறோம் என தெரிவித்தார்.