தமிழகத்தின் ஒரு நல்லதொரு ஆட்சியும், எளிய வகையில் கட்சி தொண்டர்களிடம் பழகக்கூடிய ஒரு தலைவரும், பண்பாளரும், அன்பு மிக்கவருமான கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் பின்னால் தான் இன்று அடிமட்ட தொண்டர்கள் இருக்கிறார்கள். உங்கள் பின்னால் இருப்பதெல்லாம் எப்படிப்பட்ட கூட்டம் பல கோடிகளையும்… பல லட்சம் கோடிகளையும் அடித்து குவித்து வைத்திருக்கிற கூட்டம். இங்கே வந்திருப்பதோ சாதாரண கூட்டம், எளியவர்கள் கூட்டம், நாளைய நாட்டை ஆள போவதை தீர்மானிக்கின்ற கூட்டம்.

இந்தக் கூட்டத்தின் முன்பு ஒரு எடப்பாடி அவர்களே….  நீங்கள் ஒருநாளும் உங்களுடைய ஆசைகள் நிறைவேறாது என்பதை கூறிக் கொள்கிறோம். 1972 ஆம் ஆண்டு அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் இந்த இயக்கத்தை அண்ணா திமுக என்ற இயக்கத்தை உருவாக்கிய போது, இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டன் தொடங்கிய இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டவர் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். அதன் பின்பு அகில இந்திய அண்ணா திராவிடம் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை அகில இந்திய அளவில் அதை உருவாக்கினார்.

ஏனென்றால்  அன்னைக்கு புரட்சித்தலைவர் மீது இருந்த மிகப்பெரும் கூட்டத்தைக் கண்டு மத்திய அரசே மிரண்டது. அதன் காரணமாக அந்த இயக்கம் தடைபட வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் எண்ணினார்கள். அதனால்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட  கழகம்  என்ற ஒரு மாநில கட்சி இந்திய அளவில் உருவானது என்பதையும் கூறிக் கொள்கிறோம்.

இந்த கட்சி மாநிலத்தில் உருவாகி பிற மாநிலங்களில் எம்எல்ஏக்களை உருவாக்கியது. இது சாதாரண கூட்டம் அல்ல, கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா அவர்கள் பின்னாடி நிற்கும் கூட்டம் மாபெரும் கூட்டம். இந்த கூட்டம்  எதையும் சாதிக்கும் என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொண்டு,  எனக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கிய என் ஐயா அவர்களுக்கும் கழகத்தின் முன்னோடிகளுக்கும் நன்யை கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் என பேசி முடித்தார்.