மதுரையில் நடந்த SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,   இந்த மண்ணிலே இருந்து ஒரு அமைச்சர் குறிப்பிடுகிறார்…..ஒரு நிதி அமைச்சர்…. படித்தவர்…. பொருளாதார நிபுணர் சொல்லுகிறார்….. திரு உதயநிதி அவர்களும்,  திரு.சபரீசன் அவர்களும் 30 ஆண்டு ஆயிரம் கோடி கையிலே வைத்துக்கொண்டு,  என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லுகிறார். அப்படி என்றால் இரண்டு ஆண்டு கால ஆட்சியிலே அவர் சொல்லுகிற பொழுது……

இரண்டு ஆண்டு கால ஆட்சி காலத்திலே  30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்து தான் திமுகவினுடைய சாதனையாக மக்கள் பார்க்கிறார்கள். அந்த பணத்தை எல்லாம் இங்கு இருக்கின்ற சிறுபான்மை மக்களினுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்தியிருந்தால் அவர்கள் மகிழ்ச்சியாக உங்களை பாராட்டி இருப்பார்கள்.

அத்தனை பணத்தையும் கொள்ளையடித்து என்ன செய்யப் போகிறீர்கள்  என்று தெரியவில்லை. ஆகவே கொள்ளையடிப்பது ஒன்றுதான் குறிக்கோளாக இருக்கின்ற கட்சி திமுக கட்சி. அந்த கட்சியில் எதுவுமே பார்க்க முடியாது. மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால்,  யாரோடும் கூட்டணி வைப்பார்கள். 1996 பார்த்திர்கள் என்றால்,  மரியாதைக்குரிய முன்னாள் பிரதமர் தேவகவுடா அவர்களுடன் வைத்திருந்தார்கள்.

பிறகு மரியாதைக்குரிய ஐ.கே குஜரால்  கவர்மெண்டில் இருந்தார்கள். அதற்கு பிறகு பார்த்தீர்கள் என்றால் பாரதிய ஜனதா கட்சியோடு 1999இல் இருந்து 2004 வரைக்கும்  ஆட்சி அதிகாரத்தில் இருந்தார். இலாகா இல்லாத அமைச்சராக முரசொலி மாறன் கிட்டத்தட்ட ஒரு வருடமாக இருந்தார்.  அப்போது  எல்லாம் திரு.ஸ்டாலினுக்கு கண்ணுக்கு தெரியவில்லை…. ஞாபகம் வரவில்லை. ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வைத்ததையும், ஆஹா….  அண்ணா திமுக கூட்டணி வைக்கிறது என்று சொல்லுகிறார்கள். நன்றாக சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.