கோழிக்கோட்டில் (Calicut) இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற ஒரு தனியார் சொகுசுப் பஸ்ஸில், ஓட்டுநர் குடிபோதையில் (Intoxication) அதிவேகமாக வண்டி ஓட்டுவதாகப் பயணிகள் குற்றம் சாட்டி, அவரை நிறுத்துமாறு மன்றாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் பஸ் ‘பாரதி பஸ் ஆபரேட்டர்ஸ்’ (Bharathi Bus Operators) நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. வீடியோவில், அச்சத்தில் இருக்கும் பயணிகள், ஓட்டுநரையும், அவரது உதவியாளரையும் மது அருந்தியதாகக் குற்றம் சாட்டுவதைக் கேட்க முடிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Bangalore Malayalees | Food |Travel | Lifestyle (@bangalore_malayalees)

பயணிகள் கூச்சலிட்டும், அடுத்த போலீஸ் சோதனைச் சாவடியில் பஸ்ஸை நிறுத்துமாறு கெஞ்சியும், ஓட்டுநர் பஸ்ஸை நிறுத்த மறுத்துவிட்டு, தொடர்ந்து வண்டியை இயக்கியுள்ளார்.

“பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு இதுதான் காரணம்” என்று சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அந்த ஓட்டுநர் மற்றும் பஸ் உரிமையாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.