சென்னையை அடுத்துள்ள வண்டலூரில் அரசு பேருந்தில் முதியவர் ஒருவர் ஏறினார். அந்த முதியவரை ஓட்டுநரும், நடத்துனரும் இணைந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வண்டலூரில் முதியோருக்கான பாஸ் எடுத்துவிட்டு சம்பந்தப்பட்ட பேருந்தில்  ஒருவர் ஏறியதாக கூறப்படுகிறது. அவரை இருக்கையில் அமரக்கூடாது என்று நடத்துனர் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகளப்பாக மாறியது. இதுகுறித்து தகவல் வெளியான நிலையில், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்டிசி இயக்குனர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகு சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்து எம்டிசி இயக்குனர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.