அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சியின் அவலங்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சுட்டிக் காட்டினால் முதலமைச்சர், நிதி அமைச்சர் செந்தில் பாலாஜியும் என் மீது தேவையற்ற வன்மத்தை கக்குகிறார்கள். இதிலிருந்து மக்கள் பணியில் நான் சரியான பாதையில் தான் பயணிக்கின்றேன் என்பதை உணர்கிறேன். திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று நான் பேசியதாகவும் அது வெட்டிப் பேச்சு என்றும் ஸ்டாலின் கூறுகிறார்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நான் பேசினால் அது வெட்டிப் பேச்சாம். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத 525 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சி பொறுப்பை ஏற்றது யார். அவற்றில் சுமார் 53 வாக்குறுதிகள் மத்திய அரசை வலியுறுத்தி முயற்சிகளை மேற்கொள்ளுதல் என்று குறிப்பிட்டது யார்? ஆட்சிக்கு வந்து 44 மாதங்களாகியும் தமிழக மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் மற்றும் பணப் பயன் அளிக்க கீழ்க்கண்ட ஒரு சில முக்கிய வாக்குறுதிகள் கூட நிறைவேற்ற வில்லை.