தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு பல வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த வழக்கு விசாரணை என்பது பீட்டா அமைப்புக்கு எதிராக நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளனர். அது குறித்து தற்போது பார்க்கலாம். தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித வலி மற்றும் வேதனை ஏற்படவில்லை என்பதை தெளிவு படுத்தியுள்ளது.

பல விலங்குகளை வைத்து வேலை செய்கிறார்கள். குறிப்பாக குதிரைகளை வைத்தும் தான் போட்டி நடக்கிறது. அது மட்டும் தவறு இல்லையா? காளைகளை துன்புறுத்துகிறார்கள் என்று நீங்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் காளைகளைப் பெற்ற பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை யாராவது துன்புறுத்துவார்களா.? ஜல்லிக்கட்டு போட்டி மட்டும் நடைபெறவில்லை என்றால் நாட்டு மாடுகளின் இடத்தை வெளிநாட்டு மாடுகள் பிடித்து விடும். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நம்மை கடிக்க வரும் கொசு உள்ளிட்ட பூச்சிகளை அடித்துக் கொன்றால் கூட அது விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் போல் இருக்கிறது என்று சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.