திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கடவுள் நம்பிக்கையை நாம் விமர்சிக்கவில்லை, கடவுள் நம்பிக்கை என்பது ஆன்மீகம். கடவுளுக்கு உருவம் உண்டு – உருவம் இல்லை என்பது மதம். மதத்திற்கும் – ஆன்மீகத்திற்கும் வேறுபாடு இருக்கிறது.

spirituality என்பது வேறு, religious believe என்பது வேறு.

மதம் சார்ந்த நம்பிக்கை என்பது வேறு, ஆன்மீகப் புரிதல் என்பது வேறு. உலகில் இறைவன் ஒருவன் உண்டு. இறை நம்பிக்கை என்பது ஆன்மீகத்தோடு தொடர்புடையது. ஆனால் அந்த இறைவன் உருவம் உள்ளவனா… ? உருவம் இல்லாதவனா … ? உருவம் உண்டு என்று சொல்லுவது மதம். உருவம் உண்டு என்றால் ? அது ஆணா,  பெண்ணா… ஆணும் உண்டு ? பெண்ணும் உண்டு ? என்று வடிவமைப்பது மதம்.

இறை நம்பிக்கை என்பது மட்டும் தான் ஆன்மீகம். அதன் பிறகு வழிபாட்டு முறை –  வழிபாட்டு தளம் –  உடை-  உணவு – மொழி இவையெல்லாம் மனிதன் உருவாக்கிக் கொண்ட நிறுவன நடைமுறைகள். Religion என்பது institution ஒரு நிறுவனம் அது. இஸ்லாம் என்பது ஆன்மீகக் கொள்கை…  முஸ்லிம் மசூதி,  உருவ வழிபாடு, தொப்பி அணிதல்,  குர்ஆன் படித்தல்,  ஐந்து வேளை தொழுகை செய்தல் இவையெல்லாம் மதத்தின் நடைமுறைகள். இதை ஆன்மீகம் என்று சொல்ல முடியாது. உலகம் முழுவதும் மனிதர்கள் இடத்திலே கடவுள் நம்பிக்கை இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல,  இந்தியாவின் மட்டுமல்ல.  உலகம் முழுவதும் இருக்கிறது. பல்வேறு இனத்தைச் சார்ந்த மக்களிடம் இருக்கிறது, அவரவர் அவரவருடைய குருக்கள் சொல்லுகிற வழிமுறையின் படி ஒரு வழிமுறையை உருவாக்கி,  அந்த வழிமுறையை பரப்புகிற நிறுவனங்களை உருவாக்குகிறார்கள்.

அந்த நிறுவனங்களுக்கு தலைமை பீடம்,  மடாதிபதி,  ஆதியின கர்த்தர், இமாம், அந்த கருத்துக்களை பரப்புகிறார்கள் ஆலிம்கள் –  உலமாக்கள் – போதகர் – பிஷப் – பேராயர் இதெல்லாம் நாமே உருவாக்கிக் கொண்டது. நிறுவனமாக உருவாக்கிக் கொண்டது. அப்படி இந்து மதத்திற்கு ஒரு பிலிப்ஸ் இருக்கிறது. அந்த நம்பிக்கையை நாம் இங்கே குறை சொல்லவில்லை. அந்த நம்பிக்கையை பயன்படுத்தி… அந்த உணர்வை பயன்படுத்தி…  தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக…  வாக்கு வங்கிக்காக…  வன்முறைகளை தூண்டுவது பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்-இன் செயல். அதுதான் இந்துத்துவா என தெரிவித்தார் .