நாள்தோறும் கிட்டத்தட்ட 42,000 முதல் 44,000 பயணிகள் வரை சென்னை மீனம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் உள்நாட்டு முனையத்தைப் பயன்படுத்துகின்றனர். இப்படி மக்கள் அதிகம் வருகைதரும் நேரங்களில், பயணிகளின் அதிக கூட்டம், நீண்ட வரிசைகள் மற்றும் செக்-இன் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு நீண்ட காத்திருப்பு ஆகியவை அதிக நேரத்தை எடுக்கிறது. இந்நிலையில்  பயணிகளின் நெரிசலை தவிர்க்க சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கூடுதலாக உள்நாட்டு முனையம் அமைக்கப்படுகிறது.

வரும் செப்டம்பர் மாதத்தில், சென்னை உள்நாட்டு விமான நிலையம், இரு பகுதிகளாக இயங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி புதிதாக உருவாக்கப்படும் டி 4 உள்நாட்டு முனையத்தில், இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமானங்களையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.