கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் டாக்டர் மனோஜ்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் இடுக்கி மாவட்ட மருத்துவ அதிகாரியாக இருக்கிறார். இவரிடம் மூணாறு சித்திராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ரிசார்ட் தகுதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளது. தகுதி சான்றிதழ் என்பது ஒரு ரிசார்டுகளில் உணவு சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் கட்டாயமாகும். இந்நிலையில் இந்த தகுதி சான்றிதழை வழங்குவதற்காக மாவட்ட மருத்துவ அதிகாரி ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதையடுத்து அந்த ரிசார்ட்டின் மேலாளர் மாவட்ட மருத்துவரை சந்தித்து ரூ. 75 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த மாவட்ட மருத்துவர் தனது டிரைவரான ராகுல்ராஜிக்கு கூகுள் பே மூலம் அனுப்புமாறு கூறியுள்ளார். அதன்படி அனுப்புவதாக கூறிய ரிசார்ட்டின் மேலாளர், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கூறியவாறு டிரைவரின் செல்போன் எண்ணுக்கு கூகுள் பை மூலம் பணத்தை அனுப்பினர்.

அப்போது மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ், அதிரடியாக அலுவலகத்திற்குள் புகுந்து மருத்துவ அதிகாரி மனோஜ் மற்றும் அவரது டிரைவர் ராகுல்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியவர். விசாரணைக்கு பிறகு அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜார் படுத்த உள்ளனர்.