செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கர்நாடகா காவிரி விவகாரத்துல பாரதிய ஜனதாவுக்கும்,  காங்கிரஸ்க்கும் ஒரே பாலிசிதான்.  நீங்க கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கிற காங்கிரஸ் தமிழர்களுக்கு தண்ணி கொடுத்தா அது தோத்துப் போயிரும். பிறகு பிஜேபி வந்துரும். பிஜேபிகொடுத்தா  மறுபடியும் காங்கிரஸ் வென்றிடும். அவன் மாநில நலனுக்கு தான் ஐயா பேசுவான். ஆனா என் மாநிலத்தில் இருக்கிற கட்சிகள் அதை பத்தி பேசாது.

காங்கிரஸ் – பாஜக என எங்களுக்கு தண்ணி தர மறுக்கிற இந்த ரெண்டு பேரையும் இங்க இருக்குற ரெண்டு பேரு ( திமுக – அதிமுக ) தோள்ல தூக்கிட்டு…. விக்கிரமாதித்தன்  பேயை தூக்கிட்டு போவாரு இல்ல… தூக்கிட்டு மரமரமா ஏறும்….. நம்மளும் மடத்தன மக்கள் போடுறா? இவனுக்கு போடுறா ? ரெட்டை இலைக்கு போடுறா சூரியனுக்கு போடுறா ? பிள்ளைகளை தூக்கி சுடுகாட்டில் போடுறா ? ஒரு கோட்பாடு இருக்கு.

வாக்களிக்க போகும்போது உங்கள் குழந்தைகளின் முகத்தை… உங்கள் பிள்ளைகளின் முகத்தை பார்த்துவிட்டு போய் வாக்கு செலுத்துங்கள். ஏனென்றால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அடமானம் வைக்கிற உரிமையோ, தகுதியோ, உங்களுக்கு தரப்படவில்லை. இது உங்களுக்கு சொல்லல உலகம் பூரா இங்க நேர்காணல்ல கேட்டுட்டு இருக்கின்ற என் சொந்தங்களுக்கு தான் சொல்றேன். சும்மா என்னத்தையாவது அதுக்கு போடுவது ? எதுக்கு போடுறது ?

உனக்கு ஏன் கோபம் வர மாட்டேங்குது. கன்னடனுக்கு இருக்கிற அந்த பற்று… அவன் வளம் அவனுக்கு வேணும்னு இருக்கிற பற்று.. உனக்கு ஏன் வர மாட்டேங்குது.சரி இப்போ இருக்கிற எதிர்க்கட்சிய தானே இருக்குது பிஜேபி. இங்க வந்து வளரனும்னு நினைக்கிற இல்ல… என் உரிமைக்காக போராடு… ஒரு தடவை போராடு… காவிரியில் தண்ணி கொடு… மேகதாது அணையை கட்டாதே… நிறுத்து பேசி பாரேன்…. கர்நாடகாவில் ஒரு இடம் ஜெயிக்காது.

அந்த உணர்வு அவனுக்கு இருக்கு. எங்களுக்கு இல்ல. எங்களுக்கு இருந்திருந்தால் காங்கிரஸ்ஸோடு,  பிஜேபியோடு, அதிமுக – திமுகவுக்கு கூட்டணி இல்லை. ஆனால் எங்களுக்கு தன்மானம் அடமானம் வைத்து 50 ஆண்டுகள் ஆயிருச்சு. புரிதா உங்களுக்கு ? நாங்க சோறு தின்னு தண்ணி குடிச்சோம்னா மானம், ரோஷம், சூடு, சொரணை, நல்ல ரத்தம் ஓடி இருக்கும் என தெரிவித்தார்.