ஒவ்வொரு ஆண்டும் உணவு ஆர்வலர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் “டேஸ்ட் அட்லஸ்” ஆய்வறிக்கை ஒன்றை வெளியிடும். அதேபோன்று நடப்பாண்டிருக்கும் உலகிலேயே சிறந்த 100 உணவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இதில் இத்தாலியில் உள்ள கம்போனியாவில் உள்ள குறிப்பிட்ட உணவு முதலிடத்தை பெற்றுள்ளது.

இதனை அடுத்து இந்தியாவிற்கு 59ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்த வகைப்படுத்தலில் பஞ்சாப் உணவுகள் 7வது இடத்தை பிடித்துள்ளன. மகாராஷ்டிரா உணவு வகைகள் 41 வது இடத்தையும், மேற்கு வங்க உணவு வகைகள் 54 வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை அனைத்து சுவைகளிலும் தனித்துவமாக மிக நுணுக்கமான செய்முறைகளால் உணவு பரிமாறப்படுகின்றன.