1962 ஆம் ஆண்டு மோதலுக்கு முன் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது,  1959-ம் வருடம் அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் “ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன ராணுவ வீரர்கள்  நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இறுதியில் ஒரு மாதம் ஏழு நாட்களுக்குப் பிறகு அந்த 10 வீரம் மிக்க வீரர்களின் உடல்களை சீனா  இந்தியாவிடம் ஒப்படைத்தது.

மேலும் கிழக்கு லடாக்கில் அவர்களின் நினைவேந்தல் மரியாதையுடன் நடத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.