
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். அப்போது சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, திமுக அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் சாட்டையால் கூட அடித்துக் கொண்டார்கள். அப்படியும் எதுவும் நடக்காததால் இறுதியில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத இடத்தில் சோதனை நடத்தி அவசரகதியில் ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டது.
எந்த எஃப் ஐ ஆர்-ன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்று கேட்டதற்கு இன்று வரை பதில் அளிக்கவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு என வாக்குறுதி கொடுக்கவில்லை. எனினும் 603 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்ற அவர் தெரிவித்தார்.