செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இரண்டு திராவிடக் கட்சிகளுமே சேர்ந்து 65% வாக்குகள் வாங்கி இருக்காங்க. இன்னும் 35 சதவீத வாக்குகள் வெளியே இருக்கு. மூன்றாவது ஒரு கட்சிக்கு மிகப்பெரிய இடம் தமிழகத்தில் இருக்கு. அதனால் நான் இதை பாசிட்டிவ் spiritடோடு தான் பார்க்கின்றேன். காரணம் என் கட்சியை நான் வளர்க்க வேண்டும். என் தொண்டர்களுக்கு நான் ஒரு இலக்கும்,  டைரக்ஷனும் கொடுக்கணும்.

பாலிடிக்ஸ்ல ரொம்ப முக்கியம் இலக்கு, டைரக்ஷன்.  எங்க போறோம் ? எதுக்கு போறோம் ? எப்ப ரீச் பண்ண போறோம் ? அது சில இடத்துல தாமதமாகலாம். அது நம் கையை தாண்டியது. அதனால் என்னை பொறுத்தவரை, நான் தெளிவாக இருக்கிறேன். இதனால தான் நான் இங்கு அரசியல் பண்றேன். இந்த அரசியல்ல ஒரு மாறுபட்டு அரசியல் இருக்கணும், மாற்றம் இருக்கணும். அதுல சில மூன்று,  நான்கு கருத்துக்களை ஆக்ரோஷமா வைக்கிறேன்.

திமுகவை அடியோடு எதிர்க்கிறேன். காரணம் அது ஒரு விஷம். திமுகவை பொருத்தவரை ஆரம்பித்த பிலாசபி வேறயா இருக்கலாம்.  இப்ப அவங்க நடக்கிற ஃபிலாசபி என்பது விஷம். டாக்ஸிக் பிலாசபி. அடியோடு வெறுக்கிறேன். எந்த கட்சியாக இருந்தாலும் அதில் ஃபேமிலி பாலிடிக்ஸ் வந்துச்சுன்னா….  அடியோடு வெறுக்கிறேன். காரணம் அதுல மெரிட் வராது.

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி சொன்னது போல 2019இல் OBC  செக்ரட்டரி இரண்டே பேர் தான் டெல்லியில இருந்தாங்கன்னு ஒரு பேச்சு பேசினார். அது குடும்ப அரசியல்ல வர்றவங்க மட்டும் தான் அப்படி பேச முடியும். ஏன்னா OBC  ரிசர்வேஷன் எப்ப வந்துச்சு ? இப்ப செக்ரெட்டியா இருக்கிறவங்க வயசு என்ன ? இன்னைக்கு செகரட்டரியா இருக்குறவங்க எல்லாமே ஓபிசி ரிசர்வேஷன் வரதுக்கு முன்னாடி வந்தவங்க.

அப்படி இருக்கும்போது எந்த செக்ரெட்டிரியையும் நீங்க OBC  என வகைப்படுத்த முடியாது. அவங்க ரிசர்வேஷன் OBC யா இருக்காது. ஏனென்றால் அது வந்தது இப்ப. அது புரியாம பாராளுமன்றத்தில் இதை ஒரு பாயிண்ட்டா பேசுறாங்க. அடிப்படை அறிவு இல்லாமல்…  இதனால் தான் குடும்ப அரசியலை அடியோடு வெறுக்கிறேன். எனக்குன்னு ரெண்டு மூணு கொள்கைகள் இருக்கு. அதை எப்போதுமே எங்கேயுமே நான் விட்டுக் கொடுக்கப் போவது கிடையாது. அதில் மிக மிக தெளிவாக இருக்கிறேன் என தெரிவித்தார்.