செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிஜேபி பொறுத்தவரை அது தேசிய கட்சி. திமுக ஒரு மாநில கட்சி.  தேசிய கட்சி  ஒரு மாநில கட்சியை விமர்சனம் பண்றாங்கன்னா….  ஒரு திருடனை திருடன்னு சொல்லுவாங்க. திருடனை யோக்கியன் என்றா சொல்லுவாங்க? அதனால திருடனை திருடன்னு தான் சொல்ல முடியும். அந்தத் திருடன் தான் DMK. அப்படி இருக்கும்போது ஒரு திருட்டு கும்பலை பற்றி பார்லிமெண்ட்ல சொல்றதுல என்ன தப்பு இருக்கு. ? எனவே திருட்டு கும்பல பத்தி பார்லிமெண்ட்ல சொல்றதுல தப்பு இல்ல.

அவர்களுடைய திருட்டுத்தனம், கொள்ளையடிக்கின்ற வகை, தமிழ்நாட்டை சூறையாடுகின்ற நிலை, இங்க அவ்வளவு தூரம் அராஜகம் பண்ற நிலை இதெல்லாம் இன்றைக்கு வந்து எக்ஸ்போஸ் ஆகுது. அது யாராக இருந்தாலும் சரி…  இருப்பதிலேயே மோசமான  திருடன் யாருன்னா….  அந்த ஒஸ்ட் திருடனை பத்தி தானே பாராளுமன்றத்தில் பேசுவாங்க. அதிலேயே கிரேடிங் இருக்குல இல்ல.

நான் சொல்ல வர்றது என்னன்னா….  திருடுலையே கிரேடிங் கொடுப்பாங்க. அதாவது A, B, C, D . போலீஸ் ஸ்டேஷன்ல லிஸ்ட் இருக்கும் பாத்திருக்கீங்களா? A வகுப்பு, B  வகுப்பு, C வகுப்பு என்று வகைப்படுத்தி வச்சி இருப்பாங்க. அந்த மாதிரி பார்த்தீங்கன்னா…. NO 1  திருடனை  எக்ஸ்போஸ் பண்றதுல என்ன தப்பு இருக்கு? அதுக்கு சந்தோஷப்பட வேண்டியது தானே. இன்னைக்கு அதான் நான் சொன்னேன்.  தமிழ்நாடு அளவுல நாங்க பேசிட்டு இருந்தோம். இன்னிக்கி மோடி பேசி இருக்காரு. இது ஒரு பெரிய அளவுல ஊழல் கட்சி, திருட்டு கட்சி என அவர் வெளிப்படுத்தி இருக்காரு,  அத வச்சு சந்தோஷப்பட வேண்டியது தானே என தெரிவித்தார்.