
புதுச்சேரி அசோக் நகர் பகுதியில் 46 வயது பெண் தனது கணவருடன் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இந்த பெண் கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக விவாகரத்து பெற்று தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அந்தப் பெண் 2வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்த நிலையில் கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அப்போது செல்போனில் பேசி வந்த அவர்கள் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச தொடங்கிய நிலையில் சுந்தர் அந்த பெண்ணை நிர்வாணமாக வரச் சொல்லி கட்டாயப்படுத்தினார்.
அதற்கு அந்தப் பெண்ணும் அவர் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக அவர் கூறியதை கேட்டு நிர்வாணமாக வீடியோ காலில் பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து சுந்தர் திருமணம் செலவுக்காக பணம் கேட்ட நிலையில் அந்தப் பெண் 1 லட்சம் ரூபாயை சுந்தரிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து பணம் கேட்டதால் சந்தேகமடைந்த பெண் திருமணம் செய்து கொள்ள சுந்தரை கட்டாய படுத்தினார்.
அந்த சமயத்தில் சுந்தர் நிர்வாணமாக பேசிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி அந்தப் பெண்ணை மிரட்டல் மிரட்டியுள்ளார். பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.