தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் செல்லும் முல்லை பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி வெள்ள நீர் முல்லை பெரியாற்றில் கலக்கிறது. தற்போது முல்லை பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரப்பட்டுள்ளார்.