தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளின் அருகே வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் குளிக்க செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கனமழை வரும்போது திறந்த வெளியில் நிற்கவோ, நீர்நிலைகளில் குளிக்கவோ கூடாது. மழை வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும்.

இதனையடுத்து பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பிளாஸ்டிக் உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசர கால கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி எண்கள் செயல்படுகிறது. இதனால் மழை வெள்ளம் மற்றும் பேரிடர் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04633290548 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.