பூமியை போன்று உயிரினங்கள் வாழும் சாத்திய கூறுகள் உள்ள புதிய கிரகத்தை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்மித்னோனியன் நிறுவனத்தின் வான் இயற்பியல் மைய விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகம் சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள விண்மீன் தொகுப்பில் 90 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது. இந்த கிரகத்திற்கு எல்பி 791-18 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கிரகத்தை நாசாவின் டெஸ் என்ற செயற்கைக்கோள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியை விட பெரிதாக இருக்கும் இந்த கிரகத்தில் அதிக அளவில் எரிமலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் இந்த கிரகத்தின் மறுபக்கம் தண்ணீர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் இந்த புதிய கிரகத்தில் பூமியை போன்று உயிரினங்கள் வாழும் சாத்திய கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.