திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் மிக முக்கியமான தருணம் ஆகும். இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை வெவ்வேறு விதமாக யோசித்து நடத்தி வருகிறார்கள். வித்தியாசமான இடங்களில் திருமணம் செய்து கொள்வது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கூட அடிக்கடி சோசியல் மீடியாக்களில் வெளியாகிறது. அந்த வகையில் தற்போது விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பினை ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள ஒரு கோடி ரூபாயை கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இதுவரை ஆயிரம் பேர் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகளை கார்பன் நியூட்ரன் பலூன் ஒன்றில் விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறார்கள். இந்த பலூன் பூமிக்கு கீழே இருந்து கிளம்பியதும் சரியாக ஒரு லட்சம் அடி உயரத்திற்கு சென்று நிற்கும். அந்த பலூனில் நிறைய ஜன்னல்கள் இருப்பதால் பூமியின் அழகை ரசித்துக்கொண்டே திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் முடிந்த பிறகு திருமண தம்பதிகளாக அந்த ஜோடி பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள். இந்த வசதி அடுத்த வருடம் முதல் தொடங்கப்பட இருக்கிறது. மேலும் இதுவரை ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் இன்னும் பலர் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள முன்பதிவு செய்து வருகிறார்கள்.