ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலே செயலி முதல் அலுவலக ஊழியர்கள் வரை அனைத்து விஷயங்களிலும் பல அதிரடியான மாற்றங்களை செய்தார். நிறுவன ஊழியர்களின் முக்கிய அதிகாரிகள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை அனைவரையும் நீக்கினார். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கூட பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், ட்விட்டர் ப்ளூடிக் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளார். இனி ப்ளூடிக் உள்ள பயனர்கள் 8 ஜிபி வரம்பில் உள்ள வீடியோக்களை பதிவேற்றலாம். தற்போதுள்ள 2ஜிபி வரம்பு 8ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1 மணி நேரம் வரை உள்ள வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய முடிந்தது. ஆனால் இனி, 2 மணி நேரம் வரை உள்ள வீடியோக்களையும் பதிவேற்றலாம்.