கடந்த ஆண்டு இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், உடல்நலக்குறைவு காரணமாக தனது 96-வது வயதில்  காலமானார்.அவரது இறுதிச் சடங்குகளை இங்கிலாந்து அரசு செய்தது. 10 நாட்கள் துக்க தினங்களாக அறிவிக்கப்பட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக 162 மில்லியன் பவுண்டுகள் (ரூ.1,665 கோடி) செலவிடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கருவூலம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்தார்.  இதனையடுத்து செப்டம்பர் 19 ஆம் தேதி தகனம் செய்யப்பட்டார். ராணி எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.